பொன்னேரி, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர்மாவட்டம், பொன்னேரியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள தேர்தல் மின்னணு இயந்திர பயன்பாடுக் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தில் உள்ள பயிற்சி அரங்கத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. அதில் வாக்குச்சாவடி இயந்திரம் செயல்படும் முறை மற்றும் அதனைக் கையாளும் விதம் வாக்குப்பதிவிற்கு பின்பு இயந்திரங்களுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்புதல் வரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கத் பல்வந்த் முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அப் பயிற்சி முகாமில் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன்,பொன்னேரி சாராட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், தேர்தல் தனி வட்டாட்சியர் கனகவல்லி, மண்டல துணை வட்டாட்சியர் கந்தன், சாராட்சியரின் நேர்முக எழுத்தர் செல்வேந்திரன் ஆகியோர் அப் பயிற்சி வகுப்பின்போது உடனிருந்தனர்.





















