இராசிபுரம், ஜூலை. 08 –
வெண்ணந்தூர் வட்டாரம் பழந்தின்னிப்பட்டியில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைப் பெற்றது.
நாமக்கல் மாவட்டம், ஊரக தூய்மை பாரத இயக்கம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், வெண்ணந்தூர் வட்டாரம், பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
பழந்தின்னிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு இப்பேரணி ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீதி வழியாக சென்று பின்னர் அதே இடத்தில் நிறைவடைந்தது.
மேலும், இப்பேரணியில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன், மாவட்ட மேலாண்மை இயக்கக ஒருங்கிணைப்பாளர்கள் கருணாகரன், கலைச்செல்வி, கலா, ஊராட்சி செயலர் செல்வி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.




















