ராசிபுரம், ஆக. 16 –
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன். இவர் தனக்குச் சொந்தமான மாருதி 800 காரில் தனது மகனுடன் கோவிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அணைப்பாளையம் பிரிவு அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக கார் தீப்பிடித்து எரிந்தது. இருவரும் உடனடியாக கண்ணிமைக்கும் நேரத்தில் காரை விட்டு இறங்கியதால் உயிர் தப்பினர்.
இச்சம்பவம் பற்றி தகவலறிந்து அங்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு படையினர் சாலையில் தீப்பிடித்து எரிந்துக்கொண்டிருந்த காரின் தீயை அணைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீயிக்கு இரையான காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். இவ்விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.