ராசிபுரம், ஏப். 15 –
திமுக கட்சியின் பேரூர் மற்றும் நகர வார்டு தேர்தலுக்கான இராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. ராமசாமியை திமுக கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பதினைந்தாவது பொதுத்தேர்தலில் ஊர்க்கிளைக் கழகத் தேர்தல்கள் நடந்து முடிந்ததின் தொடர்ச்சியாக, 2022, ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடக்கும், பேரூர், நகர வார்டு தேர்தலுக்கான தலைமைக் கழக பிரதிநிதிகள் கொண்ட பட்டியலை திமுக., தலைமைக் கழகம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக., தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. ராமசாமி, ராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக அக்கட்டசியின் தலைமை அறிவித்துள்ளது..




















