திருவள்ளூர், மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறியதாகவும் குற்றம் கூறி திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் சமீப காலமாக தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பொருள் அதிகளவில் புழங்குவதாகவும், ஆளும் திமுக அரசு அவற்றை தடுக்க தவறியதாகவும் குற்றம் தெரிவித்து ஏற்கனவே தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஏற்கனவே கண்டன ஆர்பாட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று மீண்டும் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டத்தில் அக் கட்சியினர் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் உழவர் சந்தை முதல் ஆயில் மில் வரை அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைப் படித்தவாறு நின்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
திருவேலாங்காடு ஒன்றிய செயலாளர் சக்திவேல், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சுதாகர், திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி ஆகியோர் அதில் கலந்து கொண்டனர்.






















