ராமநாதபுரம், நவ.11-
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது.
ராரமநாதபுரத்தில் நடந்த உயர்கல்வி நிதி உதவி வழங்கும் விழாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை வகித்து பேசும் போது, இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இதுவரை ரூ.12 கோடிக்கு மேல் கல்வி உதவி தொகை வழங்கி உள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா எப்பவும் கல்விக்கு முக்கியத்துவம் தரும். எங்கள் அமைப்பின் மூலம் இந்தியா முழுவதும் மாவட்டம் வாரியாக ஒரு குழு அமைக்கப்பட்டு கல்வியை பாதியில் நிறுத்தியவர்களை அடையாளம் கண்டு அவர்கள் எதனால் கல்வியை நிறுத்தினர் என்பதை அறிந்து அவர்கள் மீண்டும் கல்வியை தொடர தேவையான உதவியை செய்து வருவதை கடமையாக கொண்டு செயல் படுகிறோம். சேவை மனப்பான்மை என்பது அனைவருக்கும் வரவேண்டும். இந்த சேவை மனப்பான்மை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரிடமும் நீங்கள் காணமுடியும். நாங்கள் கல்வி சேவை, ரத்ததான முகாம், மருத்துவ முகாம் போன்ற பல்வேறு சேவை முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதில் கல்வி சேவை மிகவும் முக்கியமாக செயல்படுகிறது, என்றார்.
மாநில பேச்சாளர் பசீர், ஹாஜா அஜ்மீர்தீன், விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட் மாநில துணை தலைவி உம்முல் தவ்லத்தியா, எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் முகம்மது இஸ்ஹாக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் நியாஸ் கான், மாநில பயிற்சியாளர் சீனி இப்ராகிம் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 36 மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.