சென்னை, மார்ச். 03 –

சென்னை கண்ணகிநகர் பகுதியில் உள்ள அரசுமேல்நிலைப்பள்ளியில் கல்விப்பயிலும் மாணாக்கர்கள்  தரையில் அமர்ந்து படித்து வந்ததைத் தொடர்ந்து அவர்கள் மேசையில் அமர்ந்து கல்விப் பயில்வதாற்காக ரூ. 2.50 லட்சம் மதிப்பீலான மேசைகளை ரோட்டரி கிளப் ஆர்.ஏ.புரம் கிளை நிர்வாகிகள் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

  இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆர்.ஏ.புரம் சார்பில் அதன் தலைவர் சிவராமன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பி.வாசு ஏற்பாட்டில் ரூபாய் 2.50 லட்சம் மதிப்பீட்டில் 50 எண்ணிக்கையிலான மேசைகள் வழங்கும் விழாவிற்கு  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் முன்னிலையில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் 50 எண்ணிக்கையிலான மேசைகளை கண்ணகி நகர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளிடம் அவர்கள் வழங்கினார்கள்.

 முன்னதாக சிறப்பு விருந்தினரான சட்டமன்ற உறுப்பினருக்கு  சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

  பின்னர் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் கடந்த 2 வருடங்களாக கொரோனாவால் சாதாரன மக்கள் மற்றும்  தொழிலதிபர்ள் உட்பட பலர் நலிவடைந்த நிலையில், ரோட்டரி கிளப் ஆர்.ஏ.புரம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

 மேலும் ரோட்டரி கிளப் ஆர்.ஏ.புரம் இந்த பள்ளிக்கு ஏற்கனவே விளையாட்டு உபகரணங்கள், பள்ளிச்சீருடை, கொசுவலை ஆகிய உதவிகளையும் வழங்கியுள்ளதையும் நினைவுப்படுத்திப் பேசினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here