ராமநாதபுரம், ஜூன் 5-
ராமநாதபுரத்தில் நகர் தமுமுக சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை வசந்தம் மகால் வளாகத்தில் நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் கட்டிதழுவி ரம்ஜான் பண்டிகை நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
கடந்த 30 நாட்கள் நோன்பு மேற் கொண்ட இஸ்லாமியர்கள் நேற்று மாலை வானில் ரமலான் முதல் பிறையை பார்த்தனர். இதனையடுத்து புனித ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டத்துடன் துவங்கியது. இதன் தொடர் நிகழ்வாக ராமநாதபுரம் நகரின் பல்வேறு இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று நடந்தது. நகர் தமுமுக ஏற்பாட்டில் நடந்த சிறப்பு தொழுகை பாரதிநகர் வசந்தம் மகாலில் நடைபெற்றது. இங்கு பெண்களுக்கு தனியாகவும் ஆண்கள் தனியாகவும் தொழுகையில் ஈடுபட்டனர். பின்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் கட்டிதழுவி ரம்ஜான் பண்டிகை நல்வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். தமுமுக ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட தலைவர் அன்வர், முகவை பரக்கத்துல்லா, நகர் பொறுப்பு குழு தலைவர் புரோஸ் கான், பொறுப்பு குழு உறுப்பினர்கள் மன்சூர் அலி, சதக் தம்பி, பாரிக், ராஜா முகமது, உள்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் ஈத்கா மைதானத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திரண்டு ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதுபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.