திருவாரூர், மார்ச். 10 –

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று அன்னியூர் விஷ்ணுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அதில் இக்கூட்டமைப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையம், நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு, நுகர் பொருள் வாணிப கழக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மேலும் அப்போது அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நான்காயிரம் ரூபாய் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், FCI க்கு இணையாக கூலி உயர்வு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் உரத்த முழக்கமிட்டனர்.

மேலும், முன்னதாக தமிழக முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நுகர்வு பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்ததன் பேரில் இவ் ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here