காஞ்சிபுரம், செப். 6 –
ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு நெடுஞ்சாலை வல்லம் பகுதியில் எம் சாண்ட் ஏற்றி வந்த டாரஸ் டிப்பர் லாரி சைக்கிளில் வந்த முதியவர் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
திருவண்ணாமலை மாவட்டம் கேட்டவரம்பாளையத்தை சேர்ந்தவர் தருமன் கண்ணு வ/66. இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வல்லம்- வடகால் சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.
இந் நிலையில் இன்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையை சைக்கிளில் கடக்கும் பொழுது ஸ்ரீபெரும்புதூர் மார்க்கமாக எம் சாண்ட் ஏற்றி வந்த டாரஸ் டிப்பர் லாரி வேகமாக மோதியதில் லாரியின் டயருக்குள் தர்மன் கண்ணு மற்றும் அவரது சைக்கிள் சிக்கி உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த ஒரகடம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதிகாலையில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.