புதுடெல்லி:
காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீரில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த சம்பவம் வெறுக்கத்தக்கது. இத்தகைய நடவடிக்கையால் இந்தியாவை எந்த சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது.
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நாடு துணை நிற்கும். தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடன் இருந்தார்.