ஆவடி, மார்ச். 12 –

சாலை விளக்குகள் இல்லாமல் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வந்த பட்டரவாக்கம் கொரட்டூர் இடையிலான ஆவின் சாலையில் தனியார் நிறுவனம் மூலம் புதிய LED மின்விளக்குகள் அமைக்கப்பட்டு அதனை ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரதோர் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று துவங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி மண்டலம் 7 க்கு உட்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை ஒட்டிய ஆவின் சாலை பட்டரவாக்கம் முதல் கொரட்டூர் வரையிலான சாலையில் நடுவில்  80  LED விளக்குகள் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் (CAAIIUC)  சென்னை ஆட்டோ ஆன்சிலரி இண்டஸ்ட்ரியல் இன்ப்ராஸ்ட்ரக்சர் & அப்கிரேடேஷன்  கம்பெனி மூலம் LED மின் விளக்குகள் பொருத்தப்பட்டது .

அதை இன்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார். உடன் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை AIEMA மற்றும் CAAIIUC அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் தொழிற்சாலை அதிகம் உள்ள இந்த பகுதியில் இரவு நேரங்களில் செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு பசுமாடுகளை கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், சாலை முழுவதும் இருளில் மூழ்கியிருந்த இந்த சாலைக்கு புதிதாக பொறுப்பேற்ற ஆவடி காவல் ஆணையாளரின் முன்ன்னெடுத்த முயற்சியின் படி  இந்த புதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இன்று மக்கள் பயன் பாட்டிற்கு வழங்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here