கும்பகோணம், நவ. 9 –

கும்பகோணத்தில் ஆயிகுளம் சாலையில் படுத்திருந்த பசுமாட்டின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மோதி சம்பவ இடத்திலேயே பலியான  சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.

கும்பகோணம் இன்று அதிகாலை ஆயிகுளம் சாலையில் படுத்திருந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் வாகனத்தை ஓட்டி வந்த காரைக்கால் ரோட்டை சோ்ந்த அருணாச்சலம் மகன் மணிகண்டன் (32) என்பவர்  சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

நகரத்தில் முக்கிய  சாலைகளில் நாள்தோறும் 20 மணி நேரத்திற்கு மேலாக சுற்றி திரியும் மாடுகள் குறித்து, பொதுமக்கள் வணிகர்கள் நகராட்சி மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து உதவி ஆய்வாளரை மாடு முட்டி பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றார்.

மாடுகளால் அடிக்கடி இத்தகைய விபத்துக்கள் அங்காங்கே ஏற்பட்ட போதும் யாரும் கண்டு கொள்ளாமல், மாட்டின் உரிமையாளர்கள் மீது  நடவடிக்கை  எடுக்காத நிலையில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் தானும் முன்னெடுத்து நடவடிக்கைகள் எடுப்பதில்லை அதை அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்றாலும் ஏற்பதில்லை என்ற அலட்சியப் போக்கோடு இருந்தால், இன்னும் இதுப் போன்று எத்தனை உயிர்கள் போக காத்திருக்கிறதோ எனும் கவலையை தெரிவிக்கின்றனர். இதுக்குறித்து உள்ளாட்சி நிர்வாகம் இனியும் தாமதம் கொள்ளாமல் போக்குவரத்துக்கும், உயிர் மற்றும் உடமைகளுக்கும் ஆபத்துக்களை விளைவிக்கும் வகையில் நகரப் பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து தொழுவத்தில் கட்டிவைத்தும், அதன் உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here