திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், முதன்மை நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான மாவட்ட சட்ட ஆணையத்தின் மூலமாக மனிதக்கடத்தல், கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்டல், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக் குற்ற நடவடிக்கை தடுத்தல்  கருத்தரங்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று 2 மணி முதல் 5 மணி வரை நடைப் பெற்றது.

திருவள்ளூர்: செப், 22- திருவள்ளூர் மாவட்டத்தில் மனிதக்கடத்தல் , கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்டல், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் மூலமாக மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் முதன்மை நீதிபதி,  காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையிலான கருத்தரங்கம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்டரங்கில் நேற்று 2 மணி முதல்  மாலை 5 மணிவரை நடைப்பெற்றது.

இக் கூட்டத்தில்  மாவட்ட சட்டப் பணிகள் ஆணையச் செயலர் , கூடுதல் கண்காணிப்பாளர் , பெண்கள் குழந்தைகள் குற்றத் தடுப்பு பாதுகாப்பு காவல் ஆணையாளர், மாவட்ட சட்ட நல அலுவலர்கள், இண்டர் நேசனல் ஜஸ்டிஸ் மிஷன் ( I . J. M ) வருவாய்துறை அலுவலர்கள், சென்னை மாநகர காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்துக் கொண்டு மனிதக்கடத்தல் தடுத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் தடுத்தல், கொத்தடிமை ஒழித்தல், விபச்சார குற்றங்கள் தடுத்தல் போன்றவைகள் குறித்து கலந்துரையாடினர்கள் .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here