சென்னை, செப் . 21 –
இந்திய உணவுக்கழகம் விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு 2021 – 2022 ஆண்டுக்கான ஊக்கத்தொகை வழங்குகிறது. அதற்கான விண்ணப்பங்களை விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது.
2021 -2022 ஆம் ஆண்டில் கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் மற்றும் பளுதூக்கல் ( ஆண்களுக்கு ) டேபிள் டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் ( பெண்கள் ) போட்டிகளில் 15 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கும் மற்றும் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதற்கான விண்ணப்பங்களை தென்மண்டல இந்திய உணவுக்கழகம் வரவேற்கிறது.
தமிழகம், தெலுங்கான, ஆந்திர பிரதேசம், கர்நாடகா,கேரளா, லட்சத்தீவுகள், மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளை சேர்ந்த வீரர்கள் இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு அக் 20 -2021 க்குள் விண்ணப்பிக்கலாம். வளர்ந்து வரும் திறமைமிக்க இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக குறிப்பாக ஊரகப் பகுதிகளை சேர்ந்த பின்தங்கிய பிரிவினர்களிடையே விளயாட்டு திறனை ஊக்குவிப்பதற்காக இந்திய உணவுக் கழகம் வழங்குவதாக அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இளம் வீரர்கள் வாய்ப்பினை பயன் படுத்திக் கொள்ளுங்கள் குறிப்பாக தமிழகத்தில் உள்ள கிராம நகரத்தில் வசிப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள உடனடியாக விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு www.fci.gov.in என்ற இணையதளத்தைக் காணவும்.