காஞ்சிபுரம், ஆக. 05 –
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றது.
அதன் பகுதியாக காஞ்சிபுரத்தில் உள்ள இராணி அண்ணாதுரை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பி.எம்.எஸ் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி என நான்கு பள்ளிகளில் மொத்தம் 1170 தமிழக அரசின் விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் கலந்துக்கொண்டு பள்ளி மாணாக்கர்களுக்கு மிதிவண்டியினை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய எம்.எல்.ஏ எழிலரசன் மாணவ, மாணவியர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது, தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் நம் வாழ்க்கைக்கு கல்வி ஒரு ஊன்று கோலாக இருக்கும் மேலும் அரசு பள்ளிகளுக்கு தமிழக அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பல சலுகைகள் வழங்கியுள்ளது. மாணவர்கள் அதை நல்ல முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என பேசினார். இவ்விழாவில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மற்றும் கல்விதுறையைச் சார்ந்த உயர் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் காஞ்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.




















