பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினர் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச்செய்தியில்;
“காவலர் நினைவு தினத்தில், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் அவசர காலங்களில் தேவைப்படுவோருக்கு உதவுவதிலும் நமது காவல் படைகளின் தலைசிறந்த பணிகளை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். பணியின் போது உயிர்நீத்த காவல் துறையினர் அனைவருக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.