முகப்பேர், ஏப். 23 –
சென்னை முகப்பேர் ஜே ஜே நகர் பகுதியில் இயங்கி வருகிறது இஸ்லாமிய நூலகம் அறக்கட்டளை . அதன் 23 ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று நூலக வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி இர்பான் தலைமை வகித்தார். தலைமைப் பொறுப்பாளர் முஹமது நஸ்ருல்லா. முன்னிலை வகித்தார். ராஜசேகரன் வரவேற்புரை நல்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் சித்தையா கலந்து கொண்டு இஸ்லாமிய நூலகத்தின் சார்பில் பொது மக்களுக்கு 23 ஆண்டுகளாக செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களையும். முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டைகளை வழங்குவது. மருத்துவத் துறையை சார்ந்த கண் சிகிச்சை முகாம் .ரத்ததான முகாம் .உள்ளிட்டவைகளை குறித்து விளக்கமாக பேசினார்.
முன்னதாக 23ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக நீர். மோர். பந்தல் திறக்கப்பட்டது. மேலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 800 பயனாளிகளுக்கு மளிகை பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட தொகுப்பினை வழங்கினர். இதில் அறக்கட்டளையின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





















