பாதிரிவேடு, மார்ச். 05 –

திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, தேரவாய் கிராமம், அன்னை இந்திரா நகரில் உள்ள ஏகாம்பரம் என்பவரின் மனைவி இந்திராணியம்மாள் அப்பகுதியில் மகன்கள் மற்றும் மருமகள்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.

  இந்நிலையில் நேற்று முன்தினம் மார்ச் 3 ஆம் தேதியன்று இரவு 8 மணியளவில், இந்திராணி மற்றும் முதல்மருமகள் கவிதா மகன்கள் சோமசுந்தரம், லட்சுபதி, இரண்டாவது மருமகள் மேகலா ஆகியோர் இரவு உணவ சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது, இந்திராணியின் மூன்றாவது மகனான லட்சுமிபதி வீட்டிலிருந்து வெளியில் சென்றார்.

  அப்போது முன் பகைக்காரணமாக அதேக் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் சுதாகர் வயது 28 அவரின் இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்த இரும்பு ராடை வைத்து லட்சுமிபதியை தாக்க முற்பட்டார். அப்போது வீட்டிற்கு வெளியே வந்து இந்திராணியும், சோமசுந்தரமும் தடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். தடுக்க முயற்சித்த இருவரையும் சுதாகர் தன் கையில் வைத்திருந்த இரும்பு ராடால் சரமாறியாக தாக்கினார்.

  அதைத் தொடர்ந்து அங்கு வந்த சுதாகரின் உறவினர்களான ஆனந்தன் என்பவரின் மகன் ஆனந்தவேல் ஆனந்தன் மகன் அன்பரசு, சுரேஷ் சண்முகம், முத்து என்பவரின் மகன் விஜய், முருகேசன் என்பவரின் மகன் சுகுமார், சுப்பிரமணி என்பவரின் மகன் அன்புமணி ஆகிய 7 பேர் கொண்ட குழு ஒன்றாக சேர்ந்துக் கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியும், கை மற்றும் கால்களால் அடித்தும், உதைத்தும், இரும்பு கம்பியால் தாக்கியதில் இந்திராணிக்கு வலது கை முட்டியில் காயம் ஏற்பட்டு, இரத்தம் சொட்டியது. மற்றும் சோமசுந்தரத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அத்தாக்குதலில் இருந்து அவர்கள் இருவரையும் அக்குழுவினரிடமிருந்து தடுத்து காப்பாற்ற வந்த கவிதா மற்றும் மேகலா ஆகியோரையும் கடுமையாக தாக்கி அவர்களிடம் இரும்பு கம்பியைக் காட்டி கொலை மிரட்டல் விட்டனர். என, இவ்வாறு இந்திராணி பாதிரிவேடு காவல்நிலையத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், அதில் தங்களை தகாத வார்த்தையால் திட்டியும் இரும்பு கம்பியால் தாக்கி கொலைமிரட்டலில் ஈடுப்பட்ட மேற்கண்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் படி தெரிவித்துள்ளார்.

  தற்போது நான் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சைப் பெற்றதாகவும், தனது மகன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அப்புகாரில் தெரிவித்துள்ளார்.

  அப்புகரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி 7 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பழனி என்பவரின் மகன் சுதாகரரை கைது செய்துள்ளனர். மற்ற 6 பேரும் தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.. போலீசார் அவர்களைத் தேடும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here