பாபநாசம், டிச. 19 –

கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள வழுத்தூர் பகுதி மக்களின் நீண்டக் காலக் கோரிக்கையினை ஏற்று அப்பகுதியின் மக்களின் நலன் கருதி பாபநாசம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொது விநியோகத்திற்கான புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

கும்பகோணம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்கா வழுத்தூரில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பொது விநியோக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன்,சுதா, திமுக மாவட்ட துணைச் செயலாளர் கோவி அய்யாராசு,  ஒன்றிய செயலாளர் நாசர், ஊராட்சி  ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், வழுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை பாதுஷா,  மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, ஒன்றிய தலைவர் கலீல் ரஹ்மான், அய்யம்பேட்டை பேரூர் தலைவர் வாலன் சுலைமான் பாட்சா,செயலாளர் செல்லப்பா, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் முபாரக் உசேன், தொழிலதிபர் வெள்ளம்ஜி அப்துல் ரவூப், முஸ்லிம் லீக் நிர்வாகி துரை சித்திக் திமுக கிளைச் செயலாளர் கென்னடி, சரபோஜி ராஜபுரம் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here