மும்பை:

அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதி என்ற தொண்டு நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் கிளைகளை வைத்து சமூகச்சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்க நிர்வாகிகள் தீர்மானித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு மகாவீர் ஜெயந்தி தினத்தன்று (ஏப்ரல் 17) ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்கப்படும் என அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதியின் மகாராஷ்டிரா மாநில ஒருங்கிணைப்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.

இவ்விருதை பெறுபவர் செய்த சாதனைப் பட்டயத்துடன் ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் ரொக்கப்பணம் அபிநந்தனுக்கு அளிக்கப்படும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here