சென்னை, அக். 22 –

உச்சநீதிமன்றம் ஆணையின்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிகுமார் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக கடந்த அக். 20 அன்று நடைப்பெற்றது.

உச்சநீதிமன்றம் ஆணையின்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றிற்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த காணொலிக்காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில், தேர்தல் நடைப்பெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் விவரம், தேர்தல் சம்பந்தப்பட்ட பணியிடங்களின் காலியிடங்களை பூர்த்தி செய்தல், தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம், வாக்குச்சாவடிகள் கண்டறிதல், கோவிட் – 19 வழிகாட்டு நெறிமுறைகளின்படி வாக்குச்சாவடிகள் நிர்ணயம் செய்தல், வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு, நகாரட்சிகள் மற்றும் மாநகராட்சிளின் முதன்மை பயிற்றுநர்களுக்கு வாக்காளர் பட்டியல் தயாரித்தல் குறித்த பயிற்சி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயக்குவதற்கான பயிற்சி அளித்தல் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்திட ஏதுவாக அனைத்து தேவையான முன் நடவடிக்கைகளையும் விரைந்து மேற் கொண்டிட தொடர்புடைய மாநில தேர்தல் அலுவலர்களையும் அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்களையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் கேட்டுக் கொண்டார்.

இக் கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எ.சுந்தரவல்லி, பேரூராட்களின் ஆணையர் டாக்டர் செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் விகமகாஜன், ஊராட்சிகள் முதன்மை தேர்தல் அலுவலர் க. அருண்மணி, நகராட்சிகள் முதன்மை தேர்தல் அலுவலர் கு.தனலட்சுமி, சட்ட ஆலோசகர் க.வெங்கடேசன், நேர்தல் உதவி ஆணையர்  அகஸ்ரீ சம்பத்குமார் மற்றும் ஆணையத்தின் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here