கும்பகோணம், மார்ச். 24 –
ரம்ஜான் என்பது இஸ்லாமியர்களின் புனித மாதம். இந்த மாதத்தில் முஸ்லிம்கள் ரோஸா என்ற நோன்பை மேற்கொள்வர். கூடவே தொழுகை, குரான் ஓதுதல், ஈகை புரிதல் போன்றவற்றையும் கடைபிடிப்பார்கள்.
மேலும் இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான் (Ramadan Month). இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள், இந்த மாதத்தில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து இறைவனை தொழுது உணவு உண்டு நோன்பை தொடங்குவார்கள். தொடர்ந்து, சூரிய அஸ்தமனத்திற்கு பின், நோம்பை முடிப்பார்கள். நோன்பு திறப்பதை இப்தார் என்று அழைப்பர். நோன்பு இருக்கும் முப்பது நாட்களும் தினசரி ஐந்து முறை தொழுகை செய்வது கட்டாயமாகும். ரமலான் மாதத்தை இறைவனின் பெரும் அருள் மாதம் என்கிறார்கள் இஸ்லாமிய மத குருமார்கள்.
மேலும், ரம்ஜான் மற்றும் ரமலான் என்றப் பெயர்களால் இந்த பண்டிகை அழைக்கப்படுகிறது. இந்நிலையில் ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாந்தி நகரில் உள்ள பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு பின்பு இப்தார் நோன்பை திறந்தனர்.