பொன்னேரி, மார்ச். 24 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரம் அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரிம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியை விமர்சித்து பேசியதற்காக வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையைக் கண்டித்து அவர்கள் ஒன்றிய பாஜக அரசிற்கெதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
மேலும் இக் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தலைமையில், பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதேபோன்று மீஞ்சூரில் வட்டாரத் தலைவர் வழக்கறிஞர் துரைவேல் பாண்டியன் மற்றும் பதினைந்தாவது வார்டு கவுன்சிலர் பரிமளம் அருண்குமார் உள்ளிட்டவர்களின் தலைமையில் பஜார் பகுதியில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக அத்திப்பட்டு பகுதியில் கிழக்கு வட்டார தலைவர் அத்திப்பட்டு ஜி. புருஷோத்தமன் தலைமையில் அத்திப்பட்டு ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஒன்றிய அரசை கண்டித்து இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நந்தகுமார், சக்கரவர்த்தி, கந்தசாமி, புண்ணியகோட்டி, நந்தன், துரை ஜெயக்குமார், நித்யானந்தம், அல்லிமுத்து, இளையராஜா. செல்வகுமார், விஜய், சிவக்குமார், அன்பரசு, ஆப்டிகல்ஸ் ராஜா, முகமது தாரிக் உள்ளிட்ட அவ்வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என திரளான கட்சித் தொண்டர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை உரக்க முழங்கினார்கள்.























