திருவாரூர், மார்ச். 24 –

திருவாரூர் மாவட்டம் ஜாக்டோ-ஜியோ சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகம் முதல் பழைய பேருந்து நிலையம் வரையில் நடைபெற்றது.

இதில் CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், காலமுறை ஊதிய வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பே.சோமசுந்தரம், ஆர்.முத்துவேல்,சா.சண்முகவடிவேல்,ஆர்.சத்தியமூர்த்தி, மணிமாறன் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில உயர்நிலைக் குழு உறுப்பினர் மாநில தலைவர் பெ இரா. இரவி மற்றும் தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்-மாநில உயர்நிலைக் குழு உறுப்பினர் மாநில பொருளாளர் எஸ்.துரைராஜ், மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட 1000 கும் மேற்பட்ட மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here