திருவாரூர், பிப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்…

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அவர்கள் 1 ) கேங்மேன் பணியாளர்களுக்கு அனைத்து உள்முக தேர்விலும் வாய்ப்பு வழங்க வேண்டும். 2 ) விடுபட்ட ஜாயின் பணியாளர்களுக்கும் பணி வழங்கி ஸ்கேன்மென்ட் பணியாளர்களை கலை உதவியாளர்களாக பணி மாற்றம் செய்ய வேண்டும் 3 ) கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர் மாறுதல் உத்தரவு வட்டம் விட்டு வட்டம் வழங்கி ஜாயின் பணியாளர்களுக்கு ஆறு சதவீதம் ஊதிய உயர்வை ஏற்று கொண்டபடி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  கோரிக்கை முழக்கம் எழுப்பினார்கள்.

அக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊழியர் மத்திய கூட்டு அமைப்பைச் சார்ந்த 50 க்கும் மேற்பட்டோர் திட்ட துணை தலைவர் மோகனசுந்தரம் தலைமையில் திருவாரூர் விளமல் பகுதியில் அமைந்துள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சி ஐ டி யு மாவட்ட தலைவர் அனிபா திட்ட செயலாளர் ராஜேந்திரன் திட்ட பொருளாளர் முகேஷ் மன்னார்குடி கோட்ட செயலாளர் வீரபாண்டியன் திருவாரூர் கோட்ட செயலாளர் வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here