மருத்துவர்கள் என்றாலே சேவை செய்பவர்கள் என்பது மாறி அவர்கள் தேவைக்கேற்ப சம்பாதிக்கிறார்கள் என்ற எண்ணம் இந்த சமூகத்தில் இருக்கிறது. அதை உடைத்து எரிய வேண்டியது இன்றைய மருத்துவர்களின் கடமை என்று மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.
செங்கல்பட்டு, டிச. 13 –
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த ரத்தினமங்களம் பகுதியில் உள்ள தாகூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துமனையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு படங்களை வழங்கி வாழ்த்துக்களை கூறினார்.
2013-2014ம் ஆண்டில் படித்த இளைங்களை மாணவர்களில் 45 பேர் தங்க பதக்கம் உள்ளிட்ட 149 பேர்க்கு பட்டம் வழங்கினார். இதில் சௌந்தர்யா என்ற மாணவி பல்வேறு பாடப்பிரிவுகளில் சிறந்து விளங்கி 7 தங்க பதக்கம் பெற்றார். முன்னதாக மாணவர்களிடையே பேசிய புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் :- உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா தொற்றுக்கு எந்நாட்டில் தயாரித்த தடுப்பூசியை நாம் செலுத்திக் கொண்டதில் பெருமை கொள்கிறேன். நான் படிக்கும்போது தடுப்பூசி என்றால் வெளிநாட்டில் இருந்து நாம் பெருவோம். ஆனால் இன்று நம் நாட்டில் இருந்து 90 நாடுகளுக்கு தடுப்பூசி தருகிறோம் என்றார்.
மேலும், நவீன தொழில்நுட்பங்கள் நம்மை விழிங்கி விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய மாணவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது இன்றைய தொழில்நுட்பம். மருத்துவதுறை என்பது மற்றவர்களுக்கு சேவையாற்றும் துறை என ஆளுநர் தமிழிசை மாணவர்களிடையே சூளுரையாற்றினார்.
ஒரு சிறு கதை சொல்லிட்டு மருத்துவத்துறையை இன்றை காலகட்டத்தில் மக்கள் எப்படி நினைக்கிறார்கள். மருத்துவர்கள் என்றாலே சேவை செய்பவர்கள் என்பது மாறி அவர்கள் தேவைக்கேற்ப சம்பாதிக்கிறார்கள் என்ற எண்ணம் இந்த சமூகத்தில் இருக்கிறது அதை உடைத்து எரிய வேண்டியது இன்றைய மருத்துவர்களின் கடமை என்று கூறினார்.