ஊத்துக்கோட்டை, மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் திமுக கிழக்கு மாவட்ட ஓட்டுநர் அணி அமைப்பாளர் ஏற்பாட்டில் தமிழக முதல்வரின் 71 வது பிறந்த நாள் விழா நடைப்பெற்றது அதில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் மகளிருக்கு நல திட்ட உதவிகள் வழங்கி அவ்விழாவினை அக்கட்சியினர் கொண்டாடினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மார்ச்-1-ம் தேதி முதல் மார்ச் மாதம் முழுவதும் திமுக தொண்டர்கள் மாநிலம் முழுக்க பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் திமுக அரசின் மூன்றாண்டு கால சாதனை விளக்கக் கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக ஓட்டுநரணி அமைப்பாளர் கோல்ட் மணி என்கின்ற மணிகண்டன் ஏற்பாட்டில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், மற்றும் அறுசுவை உணவு வழங்கும் விழாவும் அப்பகுதியில் நடைப்பெற்றது.
மேலும், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டில் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு திமுக மாவட்டச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினருமான டி ஜே.கோவிந்தராஜன் கலந்து கொண்டு அனைவருக்கும் நல திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் அவ்விழாவிற்கு மாநில அமைப்பு சாரா திமுக ஓட்டுநர் அணி துணை செயலாளர் ஏ ஆர் டி. உதயசூரியன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே வி.உமாமகேஸ்வரி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் பி ஜே. மூர்த்தி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கே வி. லோகேஷ், மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் டி ஜெ ஜி. மனோஜ் என்கிற தமிழரசன், திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் டி.சங்கர், பொதுக்குழு உறுப்பினர் ஏ வி.ராமமூர்த்தி, மாவட்ட பகுத்தறிவு மற்றும் இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளர் சம்சுதீன், ஒன்றிய செயலாளர்கள் பூண்டி கிழக்கு டி.கே.சந்திரசேகர், வடக்கு ஜான் என்கிற பொன்னுசாமி, ஊத்துக்கோட்டை திமுக பேரூர் கழக செயலாளர் அபிராமி குமரவேல், ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், லயன் திலீப் குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டு விழாவினை மேலும் சிறப்பித்தனர்.






















