கும்பகோணம், ஜூலை. 20 –

கொரோனா உள்ளிட்ட தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் எதிர்கொள்ளும் உயிரிழப்பை முழுமையாக தவிர்க்கவும்,  கும்பகோணம் தனியார் அரசு பொறியியல் கல்லூரி மாணவியர் குழு 2 மாத கால ஆய்வில், ரூபாய் 20 ஆயிரம் மதிப்பீட்டில், கொடிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான பரிசோதனை செய்யவும், அதன் முடிவுகளை மருத்துவருக்கு தகவல் அளிக்கவும், அவர்கள் அளிக்கும் குறிப்புகளுக்கு ஏற்ப, மருந்து மற்றும் மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்கவும், நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட பகுதியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கும் வகையில், புதிய ரோபோ நர்ஸ் ஒன்றை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர். அச்செயலை  கண்டு வட்டார மருத்துவ அலுவலர் அபினேஷ் மாணவியர் குழுவை வெகுவாக பாரட்டினார்.

கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் பயிலும் நிறைவாண்டு மாணவியர்களான ரித்திகா, ஷாஹீன் பேகம், இலக்கியா மற்றும்  ஜெயா ஆகியோர் ஒரு குழுவாக இணைந்து, உதவிப்பேராசிரியர்  சோலங்கிளியின் வழிகாட்டுதலின்படி, உயிர் கொல்லும் நோயான கொரோனா உள்ளிட்ட தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்  மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் எதிர்பாராவிதமாக நோய்க்கு ஆளாகி, உயிரிழக்க நேரிடுகிறது அதனை தவிர்க்கும் வகையிலும் அதே சமயத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாத வகையில், 2 மாத கால ஆய்வில், ரூபாய் 20 ஆயிரம் மதிப்பீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளிடம் இருந்து உடலின் வெப்பநிலை, ரத்தத்தில் உள்ள பிராணவாயு அளவு, இதயத்துடிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து அதன் விவரங்களை அறையில் உள்ள மருத்துவருக்கு அனுப்பவும், அந்த விவரங்களுக்கு ஏற்ப, மருத்துவர்கள் குறிப்பிடும் மருந்து மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்கிடவும், மேலும் மருத்துவரும், சம்மந்தப்பட்ட நோயாளியும், காணொளி வாயிலாக உரையாடவும் வகை செய்யும் வகையிலும், நோயாளிகள் தனிமைபடுத்தப்பட்டுள்ள அறையை   சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கும் வகையிலும் இந்த ரோபோ நர்ஸ் வடிவமைத்துள்ளனர்.

இந்த நவீன ரோபோ நர்ஸை, திருப்பனந்தாள் வட்டார மருத்துவ அலுவலர் மரு. அபினேஷ், இன்று கல்லூரி வளாகத்தில் நேரில் பார்வையிட்டார். மாணவியர் குழு அவரிடம், இந்த ரோபோவின் சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்து கூறினர்.  மாணவியர் குழுவின் கண்டு பிடிப்பை மருத்துவர் அபினேஷ் வெகுவாக பாராட்டி, பொது மக்கள் பயன்பாட்டிற்கு ரோபோ நர்ஸை அர்பணித்தார்.

இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர்    துறைத்தலைவர் முனைவர் சாஜு, மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சாதனை புரிந்த மாணவியர் குழுவை பாராட்டி மகிழ்ந்தனர்

 

பேட்டி : மாணவியர்கள் 1. ரித்திகா  2. ஷாகீன் பேகம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here