அமெரிக்க தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு-5 பேர் பரிதாப பலி
சிகாகோ:
அமெரிக்காவின் சிகாகோ அருகே அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
ஜனநாயக நாடான அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்க அந்த நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்து உள்ளது. இதனால் அங்கு...
ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு
மாலே:
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் தோல்வியடைந்தார்....
ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் லண்டன் திரும்ப விருப்பம்
லண்டன்:
லண்டனில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மாணவிகள் வீட்டைவிட்டு வெளியேறினர். சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைய விரும்பிய அவர்கள், முதலில் துருக்கி சென்று அங்கிருந்து சிரியா சென்றுள்ளனர்.
அந்நாட்டில் ஆன்லைன் மூலம்...
மியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலை: இருவருக்கு மரண தண்டனை-2 பேருக்கு சிறைத்தண்டனை
யாங்கோன்:
மியான்மர் அரசின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவரது ஆலோசகராகவும், பிரபல வக்கீலாகவும் இருந்த கோ னி (வயது 63), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யாங்கோன் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கி லின் என்பவரை உடனடியாக கார் டிரைவர்கள்...
“சூப்பர் ஜம்போ ஏ380” விமான தயாரிப்பை நிறுத்தப்போவதாக ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு
துலூஸ்:
ஐரோப்பாவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் ‘ஏர்பஸ்’. உலகிலேயே மிகப்பெரிய விமானமான ‘சூப்பர்ஜம்போ ஏ380’ ரக விமானங்களை இந்நிறுவனம் தயாரித்து வந்தது.
500 பயணிகள் அமரும் வண்ணம், 2 அடுக்குகளை கொண்ட ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில், ‘சூப்பர்ஜம்போ...
சவுதி இளவரசருக்கு தங்க துப்பாக்கி வழங்கிய பாகிஸ்தான் எம்.பி.க்கள்
இஸ்லாமாபாத்:
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றிருந்தார். அவரது அழைப்பின் பேரில் சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, இருநாடுகளுக்கு இடையில் சுமார் 2 ஆயிரம் கோடி...
மெக்சிகோவில் விமான விபத்தில் 2 பேர் பரிதாப பலி
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அதிசாபன் டி ஸரகோசா நகர் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை இந்த பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக...
தென்ஆப்பிரிக்காவில் விமானி என ஏமாற்றி 20 ஆண்டுகள் விமானம் ஓட்டிய என்ஜினீயர்
கேப்டவுன்:
தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் வில்லியம் சாண்ட்லர். இவர் தென் ஆப்பிரிக்க அரசுக்கு சொந்தமான சவுத் ஆப்பிரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில் விமானி ஆக பணிபுரிந்தார்.
சம்பவத்தன்று தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஜெர்மனிக்கு விமானம் பயணம் செய்தது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை தொடருக்கு மேல் பறந்த போது அதிர்வு ஏற்பட்டது.
அப்போது...
இந்தியாவுடன் போர் மூண்டால், மிகவும் கொடூரமாக இருக்கும்-பாகிஸ்தான் மந்திரி சொல்கிறார்
இஸ்லாமாபாத்:
புலவாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதற்கு பிந்தைய இந்திய விமானப்படையின் பதிலடி போன்ற நடவடிக்கைகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் போர் மேகம் சூழ்ந்திருப்பதால் அங்கு பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு இரு நாடுகளையும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த பரபரப்பான சூழலில்,...
சிரியாவில் அரசுப்படைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்-21 வீரர்கள் பலி
டமாஸ்கஸ்:
சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது சிரியா ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியா நாட்டின் விமானப்படைகளும் கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது...





















