திருவண்ணாமலை, மார்ச்.  20 –

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கார்பிவேக்ஸின் ஊசி போடும் திட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனையின் பேரில் 12 வயது முதல் 14 வயதுவரை உள்ள மாணவ மாணவிகளுக்கு கார்பிவேக்ஸின் ஊசி போடும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜெயக்குமாரி தலைமையில் நடைபெற்றது.

டாக்டர் எஸ்.கனிமொழி தலைமை செவிலியர் கே.கௌரி  ஆகியோர் முன்னிலை வகிக்க தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசினர் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் கார்பிவேக்ஸின் ஊசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்து பின்பேசும் போது,

இந்திய அளவில் பள்ளிக்கல்வி துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கல்வித்துறையில் முன்மாதிரியாக மிகச்சிறப்பாக வழிநடத்தி வருகிறார். உதாரணத்திற்கு தற்போது நிதிநிலை அறிக்கையில் அரசு பள்ளி 6 முதல் 12ம் வகுப்புவரை படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கு  இந்த மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. மேலும் அரசு பள்ளியில் மாணவிகளை சேர்ப்பதற்கு வழிவகுக்கும். பெண்கள் முன்னேற்றத்திற்கு எப்பொழுதும் முன்னுரிமை அளிக்கும் தமிழக அரசுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர் சங்க செயலாளர் ஆ.ஜான்வெலிங்டன், உதவி தலைமை ஆசிரியர் மு.சண்முகம், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆர்.வெங்கடேசன் பள்ளி மாணவர் பாதுகாப்பு ஆலோசகர் என்.வேல்முருகன்,  உடற்கல்வி ஆசிரியர் ஏ.கவிதா, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கே.ராஜா, ஆர்.கந்தன், எஸ்.ரபீக், ஜெ.மதிவாணன் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here