மன்னார்குடி, டிச. 27 –
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருள்மிகு பிரஹன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ ஜெயங்கொண்டநாதர் திருக்கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மையார் மாணிக்கவாசகர், ஆகியோருக்கு பல்வேறு அபிஷேக திரவியங்களான மாபொடி, மஞ்சள்தூள், திராவிபொடி , பழ வகைகள் , தேன், பன்னீர், சந்தனம், திருநீறு, பால் , தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அந்நிகழ்வினைக் காண திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரத்திற்கு பின்பு சுவாமியை பயப்பக்தியுடன் தரிசனம் செய்து வழிப்பட்டனர்.



















