என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்-ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சென்னைக்கு மாற்றம்
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார்.
இதேபோல் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் 3 ஆண்டுகள் ஒரே...
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் மாயமான விவகாரம்-போலீசாருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தவர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் கடந்த 15-ந்தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு...
உடல்நலக்குறைவால் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் – எடப்பாடி பழனிசாமி
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றிய செல்வராஜ், நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த வைத்தியநாதன், திருவண்ணாமலை, செங்கம் தீயணைப்பு நிலையங்களில் பணிபுரிந்த சந்திரன், சுந்தரம், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலராகப் பணிபுரிந்த மதுசூதனன், குறிஞ்சிப்பாடி, தீயணைப்பு நிலையத்தில், யந்திர...
அதிமுக கூட்டணி அறிவிப்பு 24-ந்தேதி வெளியாக வாய்ப்பு
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது. குறைந்தது 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.
இதற்காக மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் 2...
டெல்லியில் திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் அமைகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரசும் இடம் பெறுகிறது. அ.திமு.க- பா.ஜனதா தொகுதி பங்கீடு அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை மறுநாள் மீண்டும் நடைபெறுகிறது....
கூட்டணி முடிவை அதிமுக தலைமை தான் அறிவிக்கும்-அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை:
தென் சென்னை எம்.பி. ஜெயவர்தன் ஏற்பாட்டில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும். அ.தி.மு.க. கொள்கை என்பது தேர்தலில் மக்களை சந்தித்து அந்த தேர்தல் மூலம் மகத்தான...
பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை-ரஜினிகாந்த் அறிவிப்பு
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் குதித்து மக்கள் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அரசியல் ரீதியாக விமர்சனமும் செய்து வந்தார்.
அரசியல் ஈடுபாடு காரணமாக தனது ரசிகர்கள் மன்றங்களை ஒருங்கிணைத்து ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமித்தார்.
அடிக்கடி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். ஆனால்...
ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராடிய கல்லூரி ஆசிரியர்கள் 25 பேர் சஸ்பெண்டு
சென்னை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 2-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். பேச்சு வார்த்தைக்கு அரசு அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால்...
சட்டவிரோதமாக செயல்படும் 3,326 டாஸ்மாக் பார்களை மூடுங்கள்-தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை:
கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பிரபாகரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், பிரபாகரன் கூறியிருப்பதாவது:-
எனக்கு குடிப்பழக்கம் இல்லை. நான் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் கடை வாடிக்கையாளர்கள் மூலம் பல தகவல்களை சேகரித்தேன். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவுக்கு முறையான ரசீது...
2000 ரூபாய் உதவித்தொகை வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை:
கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதன்மூலம்...

























