கும்பகோணம், ஜூலை. 16 –
கும்பகோணம் திருச்சி கோட்டை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவுப்படி, உதவி கோட்ட பாதுகாப்பு ஆணையர் சின்னதுரை வழிகாட்டுதலின் படி ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதத்திலும், சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் விதமாகவும், தேச ஒற்றுமைக்கான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. அதனை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மனோகரன், துணை உதவி ஆய்வாளர் லோகநாதன், மற்றும் விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் இப்பேரணி ரயில் நிலையத்திலிருந்து பறப்பட்டு மகாமகம் குளம் வரை நடைபெற்றது.
மேலும், இப்பேரணியில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சரவணகுமார் மேற்கு காவல் துறை ஆய்வாளர் பேபி மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.






















