மருத்துவ படிப்பு பயில வரும் மாணவர்கள் பெற்றோர்கள் நெகிழ்ச்சி

 

தேனி மாவட்டம் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ.மாணவியர்களுக்கு வகுப்பு  தொடங்குவதற்கு முன்னால் மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்ட  ஆலோசனை மற்றும் அறிவுரை கூட்டம் முதல்வர் ராஜேந்திரன் தலைமையிலும், திருச்சிற்றான் முன்னிலையிலும் நடைபெற்றது. அதில் முதலாம் ஆண்டு மாணவ மாணவியரை ஸ்டெதஸ்கோப் கழுத்தில் அணிந்தும், பூங்கொத்து கொடுத்தும் ஆரவாரத்துடன் முன்னாள் மாணவர்கள் வரவேற்ற நிகழ்வு அனைவரின் நெஞ்சங்களிலும் நெகிழ்வை ஏற்படுத்திய தருணமாக காட்சியளித்தது.

 கல்லூரிகளில் படிக்க வரும் புதிய மாணவ மாணவியர்களுக்கு ராக்கிங் செய்யும் முன்னாள் மாணவர்கள் ஸ்டெதஸ்கோப் மற்றும் பூங்கொத்து ஆகியவை கொடுத்து வரவேற்று புதியதாக பயில வரும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

இதில் பேசிய மருத்துவ கல்லூரி முதல்வர் முதலாம் ஆண்டு பயில வரும் மாணவ மாணவிகளுக்கு ராக்கிங் செய்யும் கல்லூரிகளை எவ்வளவோ பார்த்திருக்கிறேன் ஆனால் இன்று நடந்த சம்பவம் பெரும் ஆச்சரியமாக இருப்பதாகவும் வரவேற்கத் தக்கதாகும் இருக்கிறது என்றும் மகிழ்ச்சியுடன் முன்னாள்  மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

 

பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் பயில வரும் மாணவ, மாணவிகளை எங்கள் பிள்ளைகளை விட்டுச் செல்லுங்கள் என்றும், அவர்கள் சரியான முறையில் படிக்கிறார்களா என்று வாரத்திற்கு ஒரு முறை அந்தந்த கல்லூரி ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி கோரிக்கை விடுத்தார்.

 அரசு மருத்துவமனையில் படித்த பல மாணவர்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் நமது தேனி மாவட்டத்தின் பெயரை போற்றும் வகையில் முன்னேறியுள்ளார்கள் என்றும், அதைப் போன்று நீங்களும் நல்ல முறையில் பயின்று சிறந்த மருத்துவராக சிறந்த செவிலியராக வரவேண்டும் என்று கூறினார்

இந் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மருத்துவ கல்லூரி நிலைய மருத்துவர் ராதா, மருத்துவர்கள், செவிலியர்கள் செய்திருந்தனர்.

 சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்செந்தூரான் பேசியபோது மாணவ மாணவியர்கள் அப்துல் கலாம் கூறியது போல் கனவு காணுங்கள் என்றும், மாணவ மாணவியர்கள் சிறந்த முறையில் படித்து சிறப்பான முறையில் சிறந்த சேவைகள் செய்ய வேண்டுமென்று கூறினார்

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here