பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் சந்திப்பு-பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டுப் பிரகடனம்
புதுடெல்லி:
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அர்ஜென்டினா அதிபர் மவுரிகியோ மக்ரி டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பின்னர், வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே மற்றும் இருநாட்டு உயரதிகாரிகள் மட்டத்திலான முக்கிய பேச்சுவார்த்தை...
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டுவர மம்தா தீவிர முயற்சி
புதுடெல்லி:
மத்தியில் பா.ஜனதா அரசு மீண்டும் வருவதை தடுக்க எதிர்க்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
இதற்காக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து கூட்டணி உருவாக்க முயற்சி நடக்கிறது.
ஆனாலும், சில மாநிலங்களில் அரசியல் சூழ்நிலை வேறு மாதிரி இருப்பதால் தேசிய அளவிலான கூட்டணியை...
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் இந்திய மக்களிடையே கடும்...
நீதிமன்றங்களில் இ.பைலிங்க் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும் மத்தியரசின் திட்டத்திற்கு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் எதிர்ப்பு .. 2 நாள்...
பாண்டிச்சேரி, ஏப். 05 -
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் E-Filing முறையில் வழக்குகளை தாக்கல் செய்ய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீதிமன்றங்களில் E-filing முறையில் வாழ்க்கைகளை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் தற்காலிகமாக ஒத்தி வைக்க...
கார்கில் 22 ஆம் ஆண்டு வெற்றி தினம் – பாராமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத்...
கார்கில் 22ம் ஆண்டு வெற்றி தினத்தில், பாரமுல்லாவில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன், ஜம்மு மற்றும் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் ஷின்ஹா, சினார் படைப்பிரிவு தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே ஆகியோர் உடன் சென்றனர்.
1999ம் ஆண்டு கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு, பாரமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பாரமுல்லா ராணுவப் பிரிவு தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், குடியரசுத் தலைவரை வரவேற்று, பாரமுல்லாவின் வரலாறு மற்றும் சுதந்திரத்துக்குப்பின் இங்கு மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை விளக்கினார்.
அதன்பின் மேதகு குடியரசுத் தலைவர், பாரமுல்லா பிரிவு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பாரமுல்லா பயணத்துக்குப்பின், குல்மார்க் சென்ற குடியரசுத் தலைவர், அங்குள்ள போர் பயிற்சி பள்ளியை பார்வையிட்டார். அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு விவரிக்கப்பட்டது.
குஜ்ஜார் இன மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு- ராஜஸ்தான் சட்டசபையில் மசோதா தாக்கலானது
ஜெய்பூர்:
ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்...
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சிங்
ஜம்மு:
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வாகனத்தின்மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்,...
புல்வாமா தாக்குதல் நடத்திய தற்கொலை பயங்கரவாதி ஆதில் 3 முறை கார் ஓட்டி ஒத்திகை பார்த்தான்
ஸ்ரீநகர்:
புல்வாமா நகரில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலை நடத்தியவன் பெயர் ஆதில் அகமதுதார்.
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவனை மிகவும் திட்டமிட்டு ஜெய்ஷ்-இ- முகமது தலைவன் மசூத் அசார் தேர்வு செய்து இருந்தான்.
பாகிஸ்தான் உள்பட வெளிநாட்டு பயங்கரவாதிகளை தாக்குதலுக்கு பயன்படுத்தினால் சர்வதேச அளவில்...
வெளிநாட்டு தொலைதொடர்பு நிறுவனங்கள் சர்வதேச ரோமிங் சிம்கார்டு மற்றும் உலக அழைப்புக்கார்டுகளை விற்க, வாடகைக்கு விடவோ ஆட்சபனையில்லா...
டெல்லி, ஜன. 18 -
இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சர்வதேச ரோமிங் சிம் கார்டுகள் மற்றும் உலக அழைப்புக் கார்டுகளை விற்கவோ, வாடகைக்கு விடவோ ஆட்சேபனையில்லா சான்றிதழ் வழங்கவும், புதுப்பிக்கவும் வகைசெய்யும் கொள்கையை தொலை தொடர்புத்துறை மாற்றியமைத்துள்ளது
தொலைத்தொடர்பு துறை மேற்கொண்டுள்ள கொள்கை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக...
அரசுக்கு எதிராக கிரண்பேடி, ரங்கசாமி சதி செய்கிறார்கள் -நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி:
கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் புதுவை கவர்னர் மாளிகை முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகல் என விடிய, விடிய இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்து வருகிறது.
கவர்னர் மாளிகை...





















