கும்பகோணம், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகே ரூ. 100, 200 மற்றும் 500 ரூபாய் உள்ளிட்ட கள்ளப் பணத்தை சாக்கோட்டைப் பகுதியில் உள்ள மளிகை கடையில் மாற்ற டிப்டாப் ஆசாமி முயற்சித்துள்ளார்.
அப்போது காவல்துறையினர் வருவதை அறிந்த ஆசாமி தனது இரு சக்கர வாகனம் மற்றும் ரூ.32,100 மதிப்பிலான கள்ளப்பணம் வைத்திருந்த கை பையை அங்கேயே விட்டுவிட்டு தலை மறைவாகிவுள்ளார்.
சாக்கோட்டை பகுதியில் உள்ள மளிகை கடையில் டிப்டாப் ஆசாமி ஒருவர் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றுள்ளார். அப்போது அப் பணம் குறித்து சந்தேகமடைந்த அம் மளிகை கடை உரிமையாளர் அந்தாசாமிக்கு தெரியாமல் செல்போன் மூலம் நாச்சியார் கோவில் காவல் நிலையத்திற்கு புகார் அளித்து விட்டு அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
அதில் உஷாரான அந்த ஆசாமி அங்கிருந்து தான் வந்த இருசக்கர வாகனம் மற்றும் கொண்டு வந்த கைப்பையை அங்கேயே போட்டு விட்டு தப்பி தலை மறைவாகிவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா மற்றும் அவர் தலைமையிலான காவல்துறையினர் அந்த நபர் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் ரூ.32,100 மதிப்பிலான 100, 200, 500 ரூபாய் கள்ள நோட்டு இருப்பதைக் கண்டறிந்து அவற்றை கைப்பற்றி, தப்பி ஓடிய ஆசாமியை தேடி வருகின்றனர். அதனால் அப்பகுதியில் சிறு பரபரப்பு நிலவியது.






















