தஞ்சாவூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியளார் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் இன்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் 5 வது மாநில மாநாடு நடைப்பெற்றது. அம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
அதில் தனியார் சுயநிதி பள்ளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, சுயநிதி பள்ளிகளுக்காக தனியாக இயக்குனரகம் அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தும், மேலும் கல்வி உரிமைச் சட்டம் (RTE) தொகையினை வழங்க வேண்டும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையான கல்விக் கட்டணத் தொகை ரூ ஆயிரம் கோடியை பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் RTE தொகையினை ரூபாய் 6000 லிருந்து 12000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர், இந்த மாநில மாநாட்டில் மாநிலத் தலைவர் ஆறுமுகம், மாநில செயலாளர் முத்து ராமலிங்கம் உள்ளிட்ட தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், பள்ளி தாளாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேட்டி: ஆறுமுகம், மாநிலத் தலைவர், தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு