ஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு-சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
புதுடெல்லி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு நாளை (திங்கட்கிழமை) வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு...
‘தேர்தலை தள்ளி வையுங்கள், பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்’ – குஜராத் மந்திரி பரபரப்பு பேச்சு
ஆமதாபாத்:
காஷ்மீரில் துணை ராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநில பா.ஜனதா மூத்த தலைவரும், அம்மாநில வனம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியுமான கணபத்சிங் வாசவா, பாகிஸ்தானுக்கு எதிராக பரபரப்பாக பேசி உள்ளார். பாராளுமன்ற தேர்தலை தள்ளி வைக்கவும் அவர் கோரியுள்ளார்....
காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ஊழியர் பணி இடைநீக்கம்
மும்பை:
மும்பை அந்தேரியில் மெக்லியோட்ஸ் என்ற மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஸ்ரீநகர் கிளையில் ரியாஸ் அகமது வானி என்பவர் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் காஷ்மீரில் நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவில் அவர்,...
பாகிஸ்தான் கொடி வாங்கியவர்களுக்கு இலவசமாக ‘லைட்டர்’
புனே:
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பெரும்பாலான இடங்களில் நடக்கும் போராட்டத்தில் பாகிஸ்தான் கொடி எரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் புனேயில் ஒரு கடைக்காரர் பாகிஸ்தான் கொடி வாங்கும் போராட்டக்காரர்களுக்கு இலவசமாக லைட்டரை வழங்கி உள்ளார். இதுகுறித்து கடைக்காரர் கூறுகையில், “கொடியை...
தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதி பற்றி பரபரப்பு தகவல்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியதற்கு ஜெய்ஷ்- இ -முகமது பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதல் நடத்தியது ஆதில்அகமதுதர் என்பது தெரியவந்தது. அவனை பற்றிய பரபரப்பு தகவல் வருமாறு:-
ஆதில் அகமதுதர் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் கண்டிபா பகுதியை சேர்ந்தவன். தாக்குதல் சம்பவம் நடந்த பகுதியில்...
வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் வேண்டும்: வெங்கையா நாயுடு
புதுடெல்லி :
தங்கள் சொந்த நாட்டில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை மீண்டும் தங்கள் நாட்டுக்கே கொண்டு வந்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது அந்தந்த நாட்டு அரசுகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக...
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்-மோடி தலைமையில் அவசர ஆலோசனை
புதுடெல்லி:
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த மந்திரி சபையை கூட்டினார்.
அதன்படி காலையில் மோடி தலைமையில் மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்த கூடியது. இதில் மத்திய மந்திரிகள்...
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டுவர மம்தா தீவிர முயற்சி
புதுடெல்லி:
மத்தியில் பா.ஜனதா அரசு மீண்டும் வருவதை தடுக்க எதிர்க்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
இதற்காக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து கூட்டணி உருவாக்க முயற்சி நடக்கிறது.
ஆனாலும், சில மாநிலங்களில் அரசியல் சூழ்நிலை வேறு மாதிரி இருப்பதால் தேசிய அளவிலான கூட்டணியை...
சபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தற்போது அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.
ஆனால் காலம் காலமாக...
புல்வாமா தாக்குதலுக்கு கடும் விளைவை சந்திக்க நேரிடும்-பயங்கரவாதிகளுக்கு மோடி எச்சரிக்கை
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் வழியாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பொதுமக்களின் வாகனங்களுடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 78 வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். இவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 2,547 வீரர்கள் வாகனங்களில் சென்றனர்.
அவந்திப்போரா என்ற இடத்தில் நேற்று...

























