ராமாதபுரம், ஜூலை 10-
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பாக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் புதிய உவர்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை பொது மக்கள் பயன் பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு பொது மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையில் பொது மக்கள் குடிநீருக்காக சிரமப்படாத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொளளப் பட்டு வருகின்றன. குடிநீர் தேவை நாளொன்றுக்கு சராசரிாக 80 எம்.எல்.டி. அளவில் உள்ளது, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு சராசரியாக 35 எம்எல்டி அளவில் குடிநீர் வினியோகிக் கப்படுகிறது. இதுதவிர உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் மூலமாகவும் பொது மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில் ஒ.என்.ஜி.சி. தமது சமுதாய வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ரூ.96.11 லட்சம் மதிப்பில் எஸ்.பி.பட்டிணம் வெண்ணத்துார் (ராமநாதரம் ஊராட்சி ஒன்றியம்), பொதுகுளம் (கடலாடி ஊராட்சி ஒன்றியம்), கொழுந்துரை (முதுகுளத்துார் ஊராட்சி ஒ்றியம்), ரெகுநாதபுரம், காஞ்சிரங்கடி, லாந்தை (திரப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்) ஆகிய 7 கிராமங்கள் பொது மக்கள் நலனுக்காக ஆர்.ஓ. பிளாளன்ட்கள் அமைத்திட முன் வந்தது. அதன் படி எஸ்.பி. பட்டிணம் மற்றும் கொழுந்துரை கிராமத்தில் அமைக்கப்பட்ட புதிய ஆர்.ஓ. பிளான்ட்களை இன்றைய தினம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப் பட்டுள்ளது.
இது தவிர ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சமுதாய வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்புற சுகாதாரத்தினை மேம்படுத்திட ஏதுவாக 298 திநபர் இல்ல கழிப்பறைகளை அமைப்பதற்கு ரூ.89.40 லட்சம் மதிப்பிலும், பல்வேறு நீர் நிலைகளை துார்வாரி புனரமைப்பு பணிகளை மேற் கொள்வதற்கு ரூ.57.50 லட்சம் மதிப்பிலும் நிதி வழங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுளில் ஒ.என்.ஜி.சி. (Oil &Natural Gas Corporation ) நிறுவனம் சமுதாய வளர்ச்சியில் ஒருங்கிணைந்து ரூ.280.81 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் வளர்ச்சி பணிகளை மேற் கொண்டுள்ளது. பொது மக்களின் நலனில் அக்கறை கொண்டு மாவட்ட நிர்வாகத்துடன் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் ஒருங் கிணைந்து மேற் கொண்டு வரும் இத்தகைய நட வடிக்கைகளை மிகவும் பாராட்டுக் குரியது. மேலும் பொது மக்கள் நீர் நிலைகளை பாது காப்பதிலும் மழை நீரை சேகரிப் பதிலும் அக்கறை காட்ட வேண்டும். சுற்றுப் புற சுகாதாரத்தை மேம் படுத்திடும் வகையில் அதிக அளவில் மரக்கன்றகள் நட்டு பராமரித் திட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் சமுதாய வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ஆர்.ஓ.பிளாண்ட் -மாவட்ட...

















