புனே:
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பெரும்பாலான இடங்களில் நடக்கும் போராட்டத்தில் பாகிஸ்தான் கொடி எரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் புனேயில் ஒரு கடைக்காரர் பாகிஸ்தான் கொடி வாங்கும் போராட்டக்காரர்களுக்கு இலவசமாக லைட்டரை வழங்கி உள்ளார். இதுகுறித்து கடைக்காரர் கூறுகையில், “கொடியை எரிக்க வசதியாக அனைவருக்கும் இலவசமாக லைட்டர் கொடுத்து உள்ளேன்” என்றார்.