தேனி அல்லி நகரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தொல் திருமாவளவனின் பிறந்த நாள் விழாவை அன்னதானம் வழங்கியும் இரத்ததான முகாம் நடத்தியும் தொண்டர்கள் கொண்டாடினர். நாள் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேனி நகர செயலாளர் அ.ஈஸ்வரன் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொ.செல்லத்தம்பி மாவட்ட துனை அமைப்பாளர்கள் வசந்தராஜன் , வீர பிச்சை, நகர துனை செயலாளர் வீர தெய்வம்” நகர பொருளாளர் மு.பரஞ்ஜோதி , மாவட்ட செயற்குழு உறுப்பினார் ஆபி ராகம், மாவட்ட துணை அமைப்பாளர் கண்ணம்மா முருகன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட செயலாளர் பா.நாகரத்தினம் , மாநில துணை செயலாளர் உலக நம்பி, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினார் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
பெரியகுளம் ஒன்றிய செயலாளர் பாண்டவர்களுடைய ஏற்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பா நாகரத்தினம் அவர்கள் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது இந்த முகாமில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய பொறுப்பாளர் எல்.எம் பாண்டியன் கவிஞர் வைரமுத்து பேரவை நிர்வாகி டாக்டர் செல்வராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் இரா தமிழ்வாணன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கோமதி மற்றும் பஞ்சவர்ணம். விடுதலைப் பாடகி வளர்மதி. ஒன்றியச் செயலாளர் ஆண்டி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரியகுளம் இலக்கிய அணி துணை அமைப்பாளர் எம் சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நடைபெற்ற ரத்ததான முகாமில் பலர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினார்கள்