ஆவடி, ஆக. 15 –
இன்று, இந்திய திருநாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் துணை வட்டாட்சியர் நடராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அருகில் உள்ள சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார் இந்த சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில், வருவாய்த் துறையினர் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசு சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.