மயிலாடுதுறை, பிப். 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைமை பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மாநிலம் முழுவதும் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் அக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி வருகின்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்ற முடிவை தலைமை நிர்வாக குழு முடிவு செய்யும் என்றும், மேலும் பாரதிய ஜனதா கட்சி இடம் பெறாத கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும், மேலும்  மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் செல்வி ஜெயலலிதா ஆகியோரை புகழ்ந்து பேசி தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த மோடி நினைக்கிறார் என்றும், இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியால்தான் தமிழகம் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக உள்ளது என்றார்.

மேலும் எதிர் வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் நான்காவது இடத்திற்கு தள்ளப்படும் ஆனால் தொடர்ந்து வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது எனவும், மேலும் 400 சீட்டுகள் வரை வெல்வோம் என்று தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி தெரிவிப்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும், வாக்கு எண்ணிக்கையின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமின்றி ஒப்புகைச் சீட்டையும் எண்ணி தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் அதிமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதி மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த தமிமுன் அன்சாரி அந்த செய்தியை நாங்களும் கேள்விப்பட்டோம். அப்படி நடந்தால் சந்தோஷமே என்று அதிமுக கூட்டணிக்கு அச்சாரம் தெரிவிப்பது போல் பதில் அளித்தார்.

பேட்டி – தமிமுன் அன்சாரி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here