சிங்காநல்லூர்:

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எஸ்.எச். காலனி கங்கா நகரை சேர்ந்தவர் வரதராஜலு (வயது 49). தனியார் கம்பெனியில் டிரைவராக இருந்தார்.இவரது மனைவி உமா (36). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்

இந்நிலையில் வரதராஜலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை நிறுத்த அவர் முடிவு செய்தார். இதற்காக அவர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 2 மாதம் சிகிச்சை பெற்றார். இருந்தாலும் குடிப்பழக்கத்தை கைவிடமுடியவில்லை. இதனால் விரக்தியடைந்த வரதராஜலு தற்கொலை செய்யப்போவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி வந்தார். மனைவி மற்றும் பிள்ளைகள் அவருக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்து வந்தனர்.

இந்நிலையில் திடீரென வரதராஜலு மாயமாகி விட்டார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர்.

இன்று காலை கோவை விமான நிலையம் அருகே உள்ள ஜே.ஜே. நகர் வடக்கு பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் ஆண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர் மாயமான வரதராஜலு என்பது தெரியவந்தது. இதனையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here