நன்னிலம், ஆக. 14 –

நன்னிலம் அருகே மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் சிக்கி படுகாயத்துடன் சாலையில் மயக்க நிலையில் கிடந்தார் அப்போது அவ்வழியே வந்த முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ், அவ்விளஞ்சரை பொதுமக்களின் துணையுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, திருவாரூர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. மேலும் அச்சாலை விரிவாக்கத்திற்காக வண்டாம் பாலை அருகே சிறு பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

நன்னிலம் அருகே உள்ள ஆண்டிபந்தல் பகுதியைச் சார்ந்த விக்னேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் திருவாரூரில் இருந்து அவரது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் உள்ள கம்பியின் மீது மோதி விக்னேஷ் விபத்துக்குள்ளானார்.

இந்நிலையில் படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த அவ் இளஞரை, வண்டாம்பாலை பகுதியில் தீயினால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்த்து ஆறுதல் கூறிவிட்டு திரும்பி அவ்வழியாக வந்த முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பொதுமக்களின் துணையுடன் மயங்கிய நிலையில் படுகாயங்களுடன் இருந்த விக்னேஷை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

மேலும், இந்த நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்.. இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்தப் பகுதியில் விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அங்கு நடைப்பெறும் பணிக்குறித்து துறைச்சார்ந்த உயர் அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக அங்கு மேற் கொள்ளப்பட்டு வருகிறதா என்பதை உறுதிப்படுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here