திருவாரூர், டிச. 01 –
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா மற்றும் தாளடி 3,75,000 ஏக்கர் பரப்பளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது 99 சதவீதம் நடவு மற்றும் விதைப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் யூரியா உரம் இல்லாததால் விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
தனியார் கடைகளில் யூரியா வாங்க சென்றால் யூரியா உடன் நுண்ணுயூட்டங்கள் (குருணை) வாங்கினால் தான் யூரியா கிடைக்கும்.. என தனியார் கடை உரிமையாளர்கள் சொல்வதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் யூரியாவை பணம் கொடுத்து பெற நினைத்தும் யூரியா தட்டுப்பாட்டால் பெற இயலாமல், தற்போது வயல்களுக்கு யூரியா உரம் இட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
ஆகவே அரசு போர்க்கால அடிப்படையில் தேவையான அளவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் யூரியா இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதுக் குறித்து தீபங்குடி பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற விவசாயி கூறும் போது, யூரியா மற்றும் உரம் போன்ற பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதால் இயற்கை விவசாயத்திற்கு மாறிவிடலாம் என தோன்றுகிறது என்று கூறினார்.
பேட்டி:கார்த்தி,(விவசாயி) அரசவனங்காடு தீபங்குடி. (ஜி. ரவிச்சந்திரன்,
நன்னிலம்
திருவாரூர் மாவட்டம்




















