தமிழ்நாடுஅரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 6வது பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு  பண்டிகை முன்பணமாக 10,000 தமிழக அரசு வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கும்பகோணம், அக். 17 –

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 6வது மாவட்ட பேரவை கூட்டம் கலியமூர்த்தி  தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்த பேரவைக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் மாவட்ட பொருளாளர் பூபதி
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோதண்டபாணி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் கலைச்செல்வன் மாவட்ட துணைத் தலைவர்கள் தமிழ்மணி, சமுதரக்கனி, வெங்கடேசன், சச்சியனந்தன், கோவிந்தராஜ், துரைராஜ்,  பொருளாளர் பக்கிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 இதில் மாநில செயலாளர் ஆறுமுகம் கலந்துகொண்டு பேசுகையில்
மாநாட்டில் ஓய்வூதியர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நடப்பாண்டிருக்கு கருவூலங்களில் வாழ்வுரிமை  சான்று வழங்குவதிலிருந்து விலக்கு அளித்த தமிழக அரசுக்கும் மாநில மையத்திற்கும் நன்றி தெரிவித்தார்

ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் அனைவருக்கும் பண்டிகை கால முன்பணமாக 10 ஆயிரம் வழங்க வேண்டும்
ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் கருவூலங்களில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்தி உள்ளதால் பண பலன்களை வழங்கும் போது நிலுவைத் தொகை கிடைக்காமல் உள்ளது.

இதனை கலைவதற்கு பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் ஓய்வூதியர்கள் 70 வயது முடிந்தவுடன் 10 விழுக்காடு கூடுதல் ஓய்வு ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் .

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் படி மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு அதற்கான செலவுத் தொகையை திரும்பப் பெறுவதற்கு மாவட்ட அதிகாரம் அளிக்கும் குழுவிற்கு விண்ணப்பித்து ஓராண்டு மேலாகியும் காலம் தாழ்த்துவதை விட்டு விட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஓய்வூதியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி நிலுவைத் தொகையை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கிட வேண்டும்

ஓய்வூதியர்கள் இறந்தவுடன் இறுதி சடங்கு செலவினங்களுக்கு அன்றே கருவூலம் மூலம் 25 ஆயிரம் குடும்ப பாதுகாப்பு நிதி ஈடு செய்து கொள்ள உரிய ஆணை வழங்க வேண்டும்.

 ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் அனைவருக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் இனாமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு கம்யூட்டேஷன் பிடித்தம் செய்யும் காலத்தை 12 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும்.

ஊதிய குழு மற்றும் 21மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் படி அனைவருக்கும் தேசிய சுகாதார காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்க வேண்டும் .

மூத்த குடிமக்களான ஓய்வூதியர்கள் அரசு பேருந்துகளில் அனைத்து பகுதிக்கும் பயணம் செய்ய இலவச பயண அட்டை வழங்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here