தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அவர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கூட்டணிக்காக அவரை சந்திக்கவில்லை. அடிப்படை மனிதாபிமானத்தின் படி சந்தித்து உள்ளார். பிரதமர் வேட்பாளராக தி.மு.க. முன்வைக்கும் பெயர் ராகுல்காந்தி தான். தேர்தலுக்கு பின்னர் பிரதமர் வேட்பாளர் குறித்து மற்ற கட்சிகளுடன் கேட்டு முடிவு எடுக்கப்படும். ஆனால் தி.மு.க. சொல்லும் பெயர் ராகுல்காந்தியின் பெயர் தான்.

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சுயமரியாதையுடன் வளர்த்து வந்த இயக்கத்தை தற்போது உள்ளவர்கள் மற்றவர்களுக்கு அடிப்பணிந்து செல்லும் நிலைக்கு மாற்றியுள்ளனர். இதனை அந்த கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் சிந்திக்க வேண்டும்.

தி.மு.க. கூட்டணி தெளிவாக உள்ளது. எந்த இழுப்பறியும் இல்லை. ஆனால் அ.தி.மு.க. எப்படி குட்டிகரணம் போட்டு கூட்டணியை உருவாக்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here