தூத்துக்குடி; ஏப்,16-
கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான துறையினரால் சோதனை நடந்தது. அப்போது வீடு, அலுவலகத்தில் உள்ளே, வெளியே செல்ல யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இந் நிலையில் இன்று இரவு தூத்துக்குடி மக்களவை திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் சோதனை நடந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது .
இச் சோதனையில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டு மணி நேரமாக சோதனையில் ஈடுப் பட்டனர். இச் செய்தி காட்டு தீ போல் பரவிய நிலையில் திமுக தொண்டர்கள், பொறுப்பாளர்கள் என கனிமொழி வீட்டிற்கு முன் திரண்டு தேர்தல் அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர் .
பின்பு பதட்டமான சூழல் ஏற்பட்ட நிலையில் காவல் துறையினர் அப்பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டனர். காவல் துறையினர் வந்த சிறிது நேரத்துக்குப் பின் சோதனையில் ஈடுப்பட்ட அதிகாரிகள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் வெளியேறிச் சென்றனர் .
செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி இச் சோதனை, திமுக தொண்டர்களிடையே பயத்தை ஏற்படுத்தவும், திமுகவின் மீது மக்களிடையே கெட்ட எண்ணத்தை உருவாக்கவும் முயற்சிக்கின்றனர். திமுக எதையும் எதிர் கொள்வோம் என்றார். இச்சம்பவத்திற்கு பின் தொண்டர்கள் மேலும் புத்துணர்வு கொண்டு தேர்தல் பணி ஆற்றுவார்கள் என நான் நம்புகிறேன் , திட்ட மிட்டு எதிர் கட்சி வேட்பாளர்கள் மீது மட்டும் தொடர்ந்து நடத்தப் படும் பழி வாங்கும் நடவடிக்கையை வருமான வரித்துறை, தேர்தல் அலுவலர்கள் எடுத்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்,
மேலும் தேர்தல் தோல்வி பயத்தில் வேலூர் தொகுதிப் போல் இத் தொகுதியிலும் தேர்தலை நிறுத்திவிட நினைக்கும் நடவடிக்கை இது யென்றார். தமிழிசை பண்ணை வீட்டில் வாக்களார்களுக்கு வக்குக்கு பணம் அளிக்க கோடிக் கணக்கில் பணம் குவிக்கப் பட்டுள்ளது ஏன் அங்கு சோதனையிட வில்லை, தேனியில் பணப் பட்டுவாடா செய்யும் வீடியோ வலைதளத்தில் பரவி வரும் குற்றச் சாட்டுக்கு என்ன நடவடிக்கை எடுத்தது தேர்தல் ஆணையம் என வினாவினார். தனது இல்லத்திலும், அலுவலகத்திலும் நடைப்பெற்ற சோதனையில் ஆவணங்கள் ஏதும் அதிகாரிகள் கைப்பற்ற வில்லை, மேலும் அதிகாரிகளுக்கு எனது தரப்பிலிருந்து முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், அவர்கள் கால நேரம் கடந்து வந்து சோதனையில் ஈடுபடுவதற்கு சட்டத்தில் இடம் உண்டா என அவர்களிடம் தான் கேள்வி யெழுப்பியதாகவும் அதற்கு அவர்கள் எந்தப் பதிலையும் தனக்கு அவர்கள் அளிக்கவில்லை எனவும் கூறினார் .
சோதனைக்குப் பின் சம்மன் ஒன்று அவர்கள் தரப்பில் தனக்கு அளித்துச் சென்றாதாகவும் கூறினார். உடன் கீதாஜீவன், அனிதாஇராதாகிருஷ்ணன் இருந்தனர்.